Saturday, February 15, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைகோடைகால கம்ப்யூட்டர் பயிற்சி முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா

கோடைகால கம்ப்யூட்டர் பயிற்சி முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனம் YELLOW EDUSOFT. இந்நிறுவனம் பல்வேறு யுத்திகளுடன் சமூக வலைதளங்கள் வாயிலாக தொழில்கள் மேம்பாட்டிற்கு பல்வேறு விளம்பர தொடர்புகளை ஏற்படுத்தித்தருகிறது. மேலும் நிறுவனங்களுக்கு தேவையான தனி செயலி உருவாக்கம், வலைதளம் உருவாக்கம், லோகோ வடிவமைப்பு, விசிட்டிங் கார்டு உருவாக்கம், விளம்பர தயாரிப்பு, நிறுவன வியாபார வளர்ச்சிக்கு தேவையான சமூக ஊடகத் தொடர்புகளை மேம்படுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பல்வேறு வரத்தகர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது.

இந்நிறுவனம் கடந்த ஏப்ரல் – மே மாதம் கோடை கால கம்ப்யூட்டர் பயிற்சியினை வழங்கியது. இதில் BASIC COMPUTER FUNDAMENTALS, MS WORD , MS EXCEL , MS POWERPOINT, ARTIFICIAL INTELLIGENCE, EMAIL COMMUNICATION, ENGLISH TYPING – போன்ற திறன் வளர்ப்பு பயிற்சியினை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக நடத்தினர். அதில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கணினி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இங்கு பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் விழா ஞானமணி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் YELLOW EDUSOFT, Founder & CEO T. மோகன் குமார், தலைமை மேலாளர் P. தாரணி ஆகியோர் தலைமை வகித்தனர்.


இதில் சிறப்பு விருந்தினராக முனைவர் J. சந்திரமோகன், EEE துறை தலைவர், ஞானமணி காலேஜ், மேலும் கவுரவ விருந்தினராக பள்ளிகளின் துணை ஆய்வாளர் கை. பெரியசாமி , அழகி போட்டியில் Mrs. South India, Mrs. Tamilnadu, Mrs. Salem போன்ற பட்டத்தை வென்ற T. கௌசல்யா ஆகியோர் கலந்து கொண்டு, அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கவுரவ படுத்தினர். மேலும் இவ்விழாவில் JCI. CHARTER PRESIDENT சசிரேகா சதீஷ்குமார், வழக்குரைஞர் R. சதீஷ்குமார், மற்றும் JCI, JCOM, ராசிபுரம் தமிழ் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!