Tuesday, April 29, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeதகவல்கள்பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்

நாமக்கல்,ஜூன்.12: முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிர்வுத்தொகை பெற தகுதியுள்ளவர்கள் ஆவணங்களுடன் விண்ணிப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார். 1992 – முதல் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1500 மற்றும் ரூ.15,200 வைப்புத்தொகை பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில் 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பம் செய்திடலாம். இதனையடுத்து உரிய ஆவணங்களுடன் நாமக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் முதிர்வுத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை 30.06.2024-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் ரூ.1500 மற்றும் ரூ.15,200 வைப்புத்தொகை பத்திரம் அசல் மற்றும் நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் (பயனாளியின் பெயரில் – தனி வங்கிக்கணக்கு), கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், பிறப்புச்சான்றிதழ் நகல் மற்றும் ஆதார் கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்கள் இணைப்பட வேண்டும். விண்ணப்ப ஆவணங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண்.234, கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல்.-637003, தொலைபேசி எண்.04286-299460 என்ற அலுவலக முகவரியில் சமர்பிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!