
நீட் பயிற்சி பெற்று 2024-ம் ஆண்டு தேர்வு எழுதிய பிஎஸ்ஆர் பினாக்கிள் மாணவர்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. பிஎஸ்ஆர் பினாக்கிள் நீட், ஜேஇஇ தேர்வு பயிற்சி மையம் பல்வேறு பள்ளிகளுடன் இணைந்து மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ பயிற்சியளித்து வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியதில் வலைதள தனியார் கீ மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இம்மையம் சார்பில் தேர்வு எழுதிய 550 மாணவர்களில் 87 பேர் 600-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெறுவார்கள் என கீ மூலம் தெரியவந்துள்ளது. இதில் மாணவர் ஜி.சந்திரசேகர் 705 மதிப்பெண்களும், எச்.வினோத் 690 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய 380 மாணவ மாணவியர்களில் 136 பேரும், 2022-ல் 125 பேரும் அதிக மதிப்பெண்கள் பெற்று அரசு மற்றும் முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து நடப்பு ஆண்டில் சிறப்பாக தேர்வு எழுதிய மாணவர்களுக்கான பாராட்டு விழா சேலம் பயிற்சி மைய வளாகத்தில் நடந்தது. இதில் பயற்சி மைய ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பயிற்சி மையத்தின் இயக்குனர் சாய்ராம் உள்ளிட்ட ஆசிரியர்கள் கேக் வெட்டி கொண்டி மாணவர்களை பாராட்டினர். இப்பயிற்சி மையத்தின் மாணவர்கள் கடந்த மாதம் நடைபெற்ற ஐஐடிசி (மெய்ன்) தேர்வில் 99 பர்சென்டைல்க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மாணவர் இனியன் ஆதித்யா 99.93 பர்சென்டைல் மதிப்பெண்கள் பெற்று கொங்கு மண்டல அளவில் சாதனை புரிந்தார்.