நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி அண்ணா திமுக வேட்பாளர் ராஹா சு.தமிழ்மணி நாமக்கல்லில் ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அஇஅதிமுக வேட்பாளர் சு.தமிழ்மணி தொகுதியில் பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நாமக்கல் நகரில் சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில், ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டு திரும்பிய இஸ்லாமியர்களிடம் இரட்டை இலைக்கு ஆதரவாக வேட்பாளர் ராஹா சு.தமிழ்மணி , பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் .சேகர் உள்ளிட்ட கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது இரட்டை இலைக்கு வாக்களித்து ஆதரவளிக்க வேண்டும் என இஸ்லாமியர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்குகள் சேகரித்தனர். முன்னதாக பரமத்தி பகுதியில் தொழுகையின் போது இஸ்லாமியர்களிடம் அதிமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டுமென பிரச்சாரம் மேற்கொண்டார். இஸ்லாமியர்களுடன் சகோதரத்துவத்துடன் ஆரத்தழுவி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு ஆதரவளிப்பதாக இஸ்லாமியர்கள் உறுதியளித்தனர்.