நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மத்ரூட்டு, மங்களபுரம், சிங்கிலியங்கோம்பை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுக, பாமக தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியத் திமுக செயலாளர் கே.பி.ராமசுவாமி தலைமையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ் குமார் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.