ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் தவறான புகாரின் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் பெற்றோர் திரண்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராசிபுரம் அடுத்துள்ள ஆர்.புதுப்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 210 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். 15-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், பள்ளியின் தலைமையாசிரியராக பாலமுரளி இருந்த வருகிறார். இப்பள்ளியின் பயின்று வரும் இரு மாணவர்களின் பெற்றோர்களான ராஜா – சசிகலா தம்பதியினரின்
பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுமை ஏற்படுத்தும் வகையில் வீட்டுப்பாடம் வழங்குவதாகவும், பணியாற்றும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீது தொடர்ந்து பொய் புகார்கள் அளித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு பெற்றோர் மட்டும் பெற்றோர் அடிக்கடி ஆசிரியர்கள் மீது புகார் தெரிவித்து வந்தார்களாம். மேலும், மாவட்ட கல்வி அலுவலர் இதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் மீதும் புகார் தெரிவித்ததாக தெரிகிறது. இதனையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் ஒரு பெற்றோரின் புகாரின் பேரின் தலைமையாசிரியரை வேறு பள்ளிக்கு மாறுதல் செய்தாராம்.
இதனையடுத்து பிற பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் பாலமுரளி மாவட்ட கல்வி அலுவலர் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்தது தவறு. ஒரு பெற்றோரின் புகாரின் பேரில் தவறாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பள்ளி முன்பாக திரண்டனர். இதனையடுத்து ராசிபுரம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் எம்.விஜயகுமார், ஆய்வாளர் ஆர்.நாகலட்சுமி, உதவி ஆய்வாளர் எம்.மனோகரன், செல்வம் உள்ளிட்டோர் சம்பவ இடம் சென்று பெரும்பான்மை பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பணியிட மாற்றம் செய்யப்பட்டு தலைமையாசிரியை மாணவர்கள் நலன் கருதி இதே பள்ளிக்கு மீண்டும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து காவல்துறையினர் கல்வித்துறை அலுவலர்களிடம்பேசி, தலைமையாசிரியர் பாலமுரளி மீண்டும் அதே பள்ளிக்கு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து பெரும்பான்மை பெற்றோர்கள் போராட்டத்தை சமரசமடைந்து போராட்டத்தை கைவிட்டு திரும்பினர்.
பொய் புகார் அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்:
கல்வித்துறை அலுவலர்கள் ஒரு சிலரின் புகாரின் பேரில் முறையாக விசாரணை நடத்தாமல் இது போன்று ஆசிரியர்களை பணியிட மாறுதல் செய்யக்கூடாது என வலியுறுத்தினர். தற்போது பள்ளியில் நன்றாக ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருவதாகவும் தலைமையாசிரியர் பலமுரளி வந்த பிறகு தான் மாணவர்கள் படிப்பில் நன்றாக கவனம் செலுத்துவதாகவும் இதுபோன்று பொய்யான புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது வேதனையளிக்கிறது. இதுபோன்று பொய் புகார் அளிக்கும் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




