ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன் உபயோகப்படுத்திய வாகனங்கள் மீது மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனர். ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் பேருந்துகள், இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (நாமக்கல் வடக்கு) எம்.பதுவை நாதன் தலைமையில், ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.செல்வகுமார் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டார்.

இதில் அனுமதிக்கு புறம்பாக பொதுமக்களுக்கு இடையூறாக அதிக சத்தம் ஏற்படுத்தக்கூடிய ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் பொருத்தப்பட்டிருந்த இரண்டு சரக்கு வாகனங்கள், நான்கு பேருந்துகளில் ஏர் ஹாரன் பொரு்ததப்பட்டது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இனி
பொதுமக்களுக்கு இடையூறாக அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் பேருந்துகளில் பொருத்தப்படக்கூடாது என ஒட்டுனர்களிடம் எச்சரிக்கப்பட்டது.
ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி, மங்களபுரம் போன்ற பகுதிகளில் இது போன்று அனுமதிக்குப் புறம்பாக பள்ளி மாணவர்கள், வயதானோர், மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்தும்வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எம்.பதுவைநாதன் தெரிவித்துள்ளார்.




