ஹிடாச்சி எனர்ஜியின் சர்வதேச தலைமை நிர்வாகியாக (உருமாற்றம், செயல்திறன் மற்றும் பகுப்பாய்வு – ஏஐ) பணியாற்றும் மாதவன் பெருமாள், Companies Forum வழங்கிய“India’s Top 1% Leaders Award” விருதினைப் பெற்றார். AI, Analytics, Digital Transformation மற்றும் நிறுவன மாற்றத் துறைகளில் அவர் ஆற்றியுள்ள சிறப்பான பங்களிப்பு மற்றும் வணிக தாக்கத்திற்காக இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டது. இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில் பல துறைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தலைவர்களில் இருந்து தேர்வு செய்யப்படும் “Top 1% Leaders Award” என்பது தலைமைத்துவம், புதுமை, வணிக வளர்ச்சி, சமூக தாக்கம் மற்றும் நிறுவன மாற்றத்தில் சிறந்து விளங்கும் தலைவர்களுக்கு வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகும். இந்த விருது, ஒரு தலைவரின் சாதனைகளை மட்டுமல்லாமல், அவர் உருவாக்கிய நீண்டகால வணிக மற்றும் சமூக தாக்கத்தையும் அங்கீகரிக்கிறது.

இந்த விருதை SEBI நிர்வாக இயக்குநர் ராம் மோகன் ராவ், ஒலிம்பியன் மற்றும் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், மற்றும் Association of Indian Universities (AIU) இணைச் செயலாளர் டாக்டர் அலோக் குமார் மிஸ்ரா ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்.
மேலும், நிகழ்வில் ஒரு பகுதியாக நடைபெற்ற “Enterprise AI Fails at the Data Layer. Why?” என்ற தலைப்பிலான சிறப்பு வட்டமேசை கலந்துரையாடலிலும் மாதவன் பெருமாள் பங்கேற்று தனது கருத்துகளை பகிர்ந்தார். செயற்கை நுண்ணறிவு முயற்சிகள் வெற்றியடைய, நம்பகமான, ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் நல்ல நிர்வாகம் செய்யப்பட்ட தரவுகளே வெற்றியின் அடித்தளம் என்றும் அவர் வலியுறுத்தினார். 29 ஆண்டுகளுக்கும் மேலான உலகளாவிய அனுபவத்துடன், AI, Analytics மற்றும் Enterprise Transformation துறைகளில் இந்தியாவை உலக அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் மாதவன் பெருமாளின் இந்த அங்கீகாரம், இந்திய நிறுவன உலகிற்கும் தமிழ் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
இவர் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பி.இ., பட்டம், பெங்களூர் ஐஐஎம் நிறுவனத்தில் எம்பிஏ., முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




