Thursday, August 6, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்ராசிபுரம் தலைமை அரசு மருத்துவமனை "தலைமை மருந்தாளுநர் பணி நிறைவு விழா"

ராசிபுரம் தலைமை அரசு மருத்துவமனை “தலைமை மருந்தாளுநர் பணி நிறைவு விழா”

ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தலைமை மருந்தாளுநராகப் பணியாற்றி நிறைவு பெற்ற எஸ்.தேவகிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. அரசு தலைமை மருத்துமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் கே.கலைச்செல்வி தலைமை வகித்தார்.


செவிலியர் மாதேஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை மருந்தாளுனர் ஏ. ராஜு , டாக்டர் சியாமளா, மருந்தாளுநர்கள் வி. தருண், வி.ஷாலினி, மோகன்ராஜ், சரண்யா, சுபா, ராகவன், செவிலியர்கள் மகாலட்சுமி, சுதா, கலைவாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி அவரது சேவைகளை பற்றி பேசினார்கள். மேலும் அவருக்கு பொன்னாடை போர்த்தி, கெளரவித்து நினைவுப் பரிசளித்தனர். மயிலாடுதுறை தாமோதரன், விஷால் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!