ராசிபுரம் “ஈஷா யோகா மையம் சார்பில், யோகா பயிற்சி முகாம் ஆக.5-ல் துவங்கி ஏழு நாட்களுக்கு ராசிபுரத்தில் நடைபெறுகிறது. ராசிபுரம் பட்டணம் சாலை சரவண மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும் இம்முகாம் காலை 6 மணி முதல் 8.30 மணிவரையும், பகல் 10 மணி முதல் 12.30 மணி வரையும், பின்னர் மாலை 6 மணி முதல் 8. 30 மணிவரையும் மூன்று பிரிவுகளாக இப்பயிற்சி முகாம் நடைபெறும். இதில் 15 வயதிற்கு மேற்பட்டோர் ஏதாவது ஒரு பிரிவில் ஏழு நாள் முகாமில் பங்கேற்கலாம் என ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.

இப்பயிற்சி மேற்கொள்வதால் மனம் ஓருநிலைப்படுத்தப்படும், நினைவாற்றல் அதிகரிக்கும், கல்வியில் மனம் குவிப்பு, ஆஸ்துமா, ரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டுவலி, முதுகுவலி, இருதய நோய், உடற் பருமன் போன்றவற்றையும் தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9443570950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ராசிபுரம் ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.




