Saturday, June 13, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா நாமக்கல் வருகை

வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா நாமக்கல் வருகை

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தனது மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க நாமக்கல் வருகை தந்தார். பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் இல்லத்திற்கு வந்த அவர் அழைப்பிதழ் கொடுத்து, முன்னாள் மாவட்ட தலைவர் வெள்ளையன் அவர்களின் உடல் நலம் குறித்தும் நேரில் விசாரித்தார்.

தொடர்ந்து பேரமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இணைப்பு சங்க நிர்வாகிகளை திருச்சி சாலையில் உள்ள கிரீன்ஸ் சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் சந்தித்து அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, திருச்செங்கோடு, கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு இணைப்பு சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!