Friday, May 1, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்குமாரபாளையம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி

குமாரபாளையம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக நடந்தே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற வேட்பாளராக களம் காணும் முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி நேற்று  குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளில்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.முன்னதாக காவேரி  நகர் பகுதியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் நடந்தே சென்று வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். . வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின் போது தங்கமணி பேசியதாவது:
 அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விசைத்தறி கூட்டங்களுக்கு 1400 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். அதேபோல விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக, இலவச வேட்டி சேலை மட்டுமல்லாமல், தீபாவளிக்கு ஒரு புடவை வழங்கப்படும். அதனை விசைத்தறிகளில் ஓட்டிக் கொள்ளலாம்  என எடப்பாடியார் அறிவித்துள்ள காரணத்தினால், 365 நாட்களும் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் இந்த ஆட்சியிலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.  தமிழ்நாடு போதை மாநிலமாக உருவாகிவிட்டது இளம் பெண்களும் இளைஞர்களும் கஞ்சாவுக்கு அடிமையாகி விட்ட காரணத்தினால், இரண்டு வயது குழந்தையை கூட விட்டு வைக்காமல் அதுவும் குமாரபாளையத்தில் கூட ஆறு வயது குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியது உங்களுக்கு தெரியும். மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை உருவாகி விடும்.. ஏன் என்று சொன்னால்  தி.மு.க. ஆட்சியில் கொலை கொள்ளை கற்பழிப்பு நடைபெறாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நாடு மிக மோசமாக சென்று கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதில் நகர செயலர் பாலசுப்ரமணி உள்பட பலர் உடனிருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!