Friday, April 3, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்தாய்-தந்தையிடம் ஆசி பெற்று மனு தாக்கல் செய்த அமைச்சர் மா.மதிவேந்தன்

தாய்-தந்தையிடம் ஆசி பெற்று மனு தாக்கல் செய்த அமைச்சர் மா.மதிவேந்தன்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் களம் இறங்கியுள்ள டாக்டர் மா.மதிவேந்தன், தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலர்களிடம் தாக்கல் செய்தார். ராசிபுரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் வெ.முருகன் முன்பாக உறுதி மொழி ஏற்று தனது மனுவை தாக்கல் செய்தaர்.

முன்னதாக தனது தாய் -தந்தையருடன் மனு தாக்கல் செய்ய வந்த அவர், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தாய்-தந்தையர் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதனையடுத்து பெற்றோர் அமைச்சரை உச்சி முகந்து ஆசியுடன் உணர்வு பூர்வமாக மகிழ்ந்து மனுதாக்கல் செய்ய வழி அனுப்பி வைத்தனர். முன்னதாக அமைச்சர் மா.மதிவேந்தன்,சிவானந்தா சாலை, பழையபஸ் நிலையம் ஆகிய பகுதியில் உள்ள வினாயகர் ஆலயத்தில் சுவாமி தரிசனம செய்த பின் மனு தாக்கல் செய்ய புறப்பட்டு சென்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!