Friday, April 3, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்அடிமை ஆட்சியா ? ஆண்மை ஆட்சியா? தலை நிமிர்ந்த தமிழகமா? தவழ்ந்து கிடக்கும் தமிழகமா? ராசிபுரம்...

அடிமை ஆட்சியா ? ஆண்மை ஆட்சியா? தலை நிமிர்ந்த தமிழகமா? தவழ்ந்து கிடக்கும் தமிழகமா? ராசிபுரம் திமுக வேட்பாளர் Dr.மா.மதிவேந்தன் கேள்வி.

தமிழகத்தில் அடிமை ஆட்சி வேண்டுமா? ஆண்மை ஆட்சி வேண்டுமா ? தலை நிமிர்ந்த தமிழகமா? தவழ்ந்து கிடக்கும் தமிழகமா? என வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என ராசிபுரம் (தனி) தொகுதியின் வேட்பாளரும், அமைச்சருமான மா.மதிவேந்தன் வாக்காளர்களுக்கு கேள்வி எழுப்பினார்.


ராசிபுரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைப்பெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் மா.மதிவேந்தனை ஆதரித்துப் பேசினார். இக்கூட்டத்தில் அமைச்சர் மா.மதிவேந்தன் பேசியது:

இந்தத் தொகுதியில் முதன் முதலாக கடந்த தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராக இருந்து வருகிறேன். தொகுதியின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். சிலர் இந்தத் தொகுதியை அதிமுகவின் கோட்டை என கூறி வருகின்றனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்த பணிகள் என்ன என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். எந்த திட்டத்தையும் அதிமுக செய்யவில்லை. 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி இருந்தபோதும், இந்தத் தொகுதிக்கு தேவையான முன்னேற்றம் கிடைக்கவில்லை.

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளது. சாலைப்பணிகளாட்டும், குடிநீர் திட்டங்கள், மாவட்ட மருத்துவமனை, பட்டா வழங்கல், டைடல் பார்க் போன்ற எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. 234 தொகுதிகளிலும் ராசிபுரம் தொகுதியை முதன்மையான தொகுதியாக மாற்றும் வரை ஒயமாட்டோம். தமிழக முதல்வர் மக்களுக்கு சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக தன்னை ஆதரித்து, பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்:,எம்பி., பேசியது:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஐந்த ஆண்டு கால ஆட்சியில், மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் திமுக தேர்தல் அறிக்கையில், மேலும் புதிய நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000, முதியோர் உதவித்தொகை ரூ.2,000, புதுமைப்பெண் திட்டத்திற்கு மாதம் ரூ.2,000, இல்லத்தரசிகளுக்கான புதிய திட்டத்தின் கீழ் ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வாக்காளர்களிடம் கூட்டணி கட்சியின் கொண்டு சேர்க்க வேண்டும். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சியை உருவாக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், கட்சியின் தொகுதி பார்வையாளர் நன்னீயூர் ராஜேந்திரன், மாவட்ட திமுக பொருளாளர் ஏ.கே.பாலசந்தர், நகர செயலாளர் என்.ஆர்.சங்கர், ஒன்றிய கழக செயலாளர்கள் கேபி.ராமசுவாமி, ஆர்.எம்.துரைசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலரும் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!