ராசிபுரம் அதிமுக நகர அவைத் தலைவராக இருந்த வி.கே.ஆர்.கே.ராமசாமி தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக்கொண்டுள்ளார். இவர் ராசிபுரம் நகர அதிமுக செயலர், பொருளாளர், அவைத் தலைவராகவும், கைத்தறி கூட்டுறவு சங்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், இவர் தமிழக வெற்றி கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையனை நேரில் சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார். மேலும் திருச்செங்கோடு கே.ஜி.அருண்ராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இவருடன் அக்ரி ராசிபுரம் பி.நடராஜ், திருச்செங்கோடு ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.





