Thursday, March 19, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு தினவிழா

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு தினவிழா

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு தின விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் அ.யூசுப் கான் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற இவ்விழாவை தொடர்ந்து மாணவ மாணவியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு குழு விளையாட்டு போட்டிகள் ,தடகளப்போட்டிகள் போன்றவை நடத்தப்பட்டன.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் ஆர்.சிவக்குமார் தலைமை வகித்தார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் அ.வெண்ணிலா விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தார். இயற்பியல் துறைத் தலைவர் எம்.கே.சுப்பிரமணியன், வேதியியல் துறைத் தலைவர் பி.சண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். விழாவில் ராசிபுரம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கே.விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!