ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் சன்னதியில் வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. சனிபகவான் கும்ப ராசிகளில் இருந்து மீன ராசிக்கு இடம்பெயரும் சனிப்பெயர்ச்சி முன்னிட்டு ஸ்ரீ சனீஸ்வர பகவான் சாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது.

முன்னதாக சாமிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து வெள்ளி காப்பு மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
சிங்களாந்தபுரம் திருவேஸ்வரர் ஆலயத்தில்..
இதே போல் சிங்களாந்தபுரத்தில் சனிப்பெயர்ச்சி முன்னிட்டு திருவேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இக்கோவிலில் சனி பெயர்ச்சி முன்னிட்டு சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வெ.சரோஜா , முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மகுடீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





