குமாரபாளையம் நகராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இதற்கான விழா குமாரபாளையம் நகராட்சி நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் விஜய்கண்ணன் பேசும்போது, மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கி வரும் சலுகைகள், திட்டங்கள் பற்றியும், குறிப்பாக பெண்களுக்கு விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண் திட்டம், உள்ளிட்ட திட்டங்கள் பற்றியும் விளக்கி பேசினார். நகராட்சி துணைத் தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், வேல்முருகன், நகர பொறுப்பு குழு உறுப்பினர் கந்தசாமி, செந்தில்குமார், சமுதாய அமைப்பாளர் கவுசல்யா, மகாலட்சுமி, உள்ளிட்ட சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த மகளிர்கள் பெருமளவில் பங்கேற்றனர். தொடர்ந்து
குமாரபாளையம் நகராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு அடையாள அட்டைகளை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் வழங்கினார்.
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அடையாள அட்டை
RELATED ARTICLES





