தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை தொடர்ந்து ராசிபுரத்தில் விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடந்தது. மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரி, ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் நடைபெற்ற பேரணியில் கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரி தலைவர் க.சிதம்பரம் தலைமை வகித்தார். ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.செல்வகுமார், ராசிபுரம் காவல் ஆய்வாளர் சுகவனம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
எஸ்ஆர்வி பெண்கள் பள்ளி முன்பாக தொடங்கிய பேரணி ராசிபுரம் பழைய பஸ் நிலையம், கடைவீதி, ஆத்தூர் சாலை வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கல்லூரி மாணவ, மாணவியர் சென்றனர். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
RELATED ARTICLES





