ராசிபுரம் நகரில் சாலை பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் வலியுறுத்தி வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி சார்பில் மாரத்தான் ஒட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் ஆத்தூர் சாலை கொங்கு திருமண மண்டபம் அருகே தொடங்கிய மாரத்தான் ஒட்டத்தை பள்ளியின் நிறுவனர் ஜி.குணசேகரன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் மனோகரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாரத்தான் ஒட்டம் ஆத்தூர் சாலை, கோனேரிப்பட்டி, பேருந்து நிலையம், கச்சேரி சாலை, நாமக்கல் சாலை வழியாக பள்ளியை அடைந்ததது. பின்னர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

முன்னதாக சாலை தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல், கைபேசி பேசியவாறு வாகனம் இயக்குவது தவிர்த்தல் போன்றவை குறித்தும், உடல் ஆரோக்கியம் குறித்தும் மாணவ மாணவியர் உறுதிமொழி ஏற்றனர்.





