கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை மீண்டும் உச்சம் நோக்கி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேவேளை சென்னையை விட திருச்சியில் தங்கத்தின் விலை சற்று குறைவாகவே உள்ளது.
அதன்படி திருச்சியில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்று (மார்ச் 20) ரூ.6,075 ஆக இருந்தது. இன்று (மார்ச் 21) கிராமுக்கு ரூ.95 அதிகரித்து திருச்சியில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.6,170 ஆகவும், ஒரு சவரன் ரூ.49,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,628 ஆகவும், ஒரு சவரன் ரூ.37,024 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் 50 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.