கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், 100 சதவீத தேர்ச்சி விழுக்காடு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கும், 100 சதவீத தேர்ச்சி விழுக்காடு பெற்ற பாட ஆசிரியர்களுக்கும் விருது வழங்கும் விழா கரூர் அட்லஸ் கலையரங்கில் நடைபெற்றது.
கரூர், புன்னம், அரசு ஆதிதிராவிடர் நலமேல் நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றமைக்கு தலைமை ஆசிரியர் தங்கவேலுக்கு, முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி விருது வழங்கி கௌரவித்தார். மேலும், தங்களது பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்கு 13 ஆசிரிய பெருமக்களுக்கு வி.செந்தில் பாலாஜி விருதுகள் வழங்கி கௌரவித்தார்.