Tuesday, September 16, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல் மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் - முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி...

நாமக்கல் மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்பு

ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.பட்டணம் பகுதியில் அதிமுக புரட்சித் தலைவி பேரவை சார்பில் கடந்த அதிமுக அரசின் 10 ஆண்டு கால ஆட்சியின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துண்டு பிரசுரம் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் இ.ஆர்.சந்திரசேகர் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் வெ.சரோஜா, பேரூர் செயலாளர் K.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினார்.

முன்னதாக தெருமுனைப்பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, கடந்த நாலரை ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் படும் அல்லல்களை எடுத்துக்கூறும் வகையிலும், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களும் குறித்தும் எடுத்துக்கூற இந்த தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்தப்படுகிறது. இன்னும் 6 மாத காலத்தில் தேர்தல் வர உள்ளது. தற்போதைய ஆட்சியில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. மகளிருக்கு ரூ.1000 கொடுக்கிறோம் என சொல்லி நீண்டகாலத்துக்கு பிறகு தேர்தலை மனதில் வைத்து தற்போது கொடுப்பதாக கூறுகின்றனர். இதன் பின் தற்போது விலைவாசி உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் சொன்னால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையெனில் குழந்தைகள் போதை பொருட்களுக்கு அடிமையாகி விடுவார்கள் என்றார்.

பின்னர் கடைகள், வீடுகள் தோறும் சென்று பொதுமக்களிடம் அதிமுக ஆட்சியின் சாதனை குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார். இக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட அவைத் தலைவர் எஸ்.பி.கந்தசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கே.பி.எஸ்.சுரேஷ்குமார், அதிமுக நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியச் செயலர் கே.பி.சரவணன், ராசிபுரம் ஒன்றியச் செயலர் வேம்புசேகரன், புரட்சித் தலைவி பேரவை மாவட்டத் தலைவர் இ.குமரேசன், மாவட்ட தொழில்நுட்பப் பிரிவு இணைச்செயலாளர் எம்.ஏ.பிரபு, துணைச் செயலாளர் எம். கே தினகர், மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர் கே.பிரகாசம், ராசிபுரம் நகர அதிமுக செயலர் எம்.பாலசுப்பிரமணியம், நிர்வாகிகள் வி.டி.தமிழ்செல்வன், ராதா சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!