மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நிகழ்ச்சி மஹேந்ரா கல்வி நிறுவன அறக்கட்டளையின் நிறுவனர் எம்.ஜி.பரத்குமார் தலைமையில், கல்லூரி அரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக, தமிழறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், புலவர் M.ராமலிங்கம் கலந்துகொண்டார்.
இதில், இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகளான சைபர் செக்யூரிட்டி, ECE, EEE, Aero, மெக்கானிக்கல், மெக்கட்ரானிக்ஸ், சிவில், அக்ரிகல்சுரல் ஆகிய பாடப் பிரிவுகளில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவ – மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்துகொண்டனர்.
மஹேந்ரா கல்வி நிறுவனங்கள் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் M.G. பரத்குமார் தலைமை உரையாற்றிப் பேசும்போது, அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். சிறந்த ஆசிரியப் பணியாற்றி கிடைத்தற்கரிய குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்த ஆசிரியர் சர்வ பள்ளி Dr. இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினமான ஆசிரியர் தினத்தை நாடு முழுவதும் நாம் கொண்டாடுகிறோம்.
நாம் எல்லோரும் மையமாக கருதும் கல்வியைச் சுற்றித்தான் நாம் எல்லோரும் சுழன்று கொண்டிருக்கிறோம். நமது கல்வி நிறுவனங்கள், 47 ஆண்டுகளை நிறைவு செய்து, 48-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம். மாணவ- மாணவிகள் நல்ஒழுக்கம், நல்லறம், பண்பாடு சார்ந்து ஆசிரியர்களின் உதவியோடு கல்வியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். 4 ஆண்டுகள் பொறியியல் படிப்பை படித்து முடித்த பிறகு சிறந்த குடிமக்களாக உயர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து சிறப்புரை ஆற்றி பேசிய சிறப்பு விருந்தினர் புலவர் M. இராமலிங்கம், சமுதாயத்தில் நல்லவற்றை ஆசிரியர்கள் கற்றுத் தருகிறார்கள். எண்ணங்கள்தான் மனிதர்களின் வாழ்க்கை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பொறியியல் கல்வி பயிலும் மாணவ மாணவிகள், நீங்கள் உயர்வதோடு இந்த சமுதாயத்தையும் உயர்த்துவதற்கு நீங்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும்.
நல்ல கல்வியை கற்று விட்டால் சுயமாக நின்று வளர்ச்சி பெறலாம். அதனை யாரும் தடுக்க முடியாது. நூல்கள் நம்மை வாசிக்க அழைக்கின்றன. ஆனால், செல்போன் போன்ற சாதனங்கள் சில நேரங்களில் நம்மை சிக்க வைத்து விடுகின்றன. கருவறையும் வகுப்பறையும் சரியாக அமைந்து விட்டால், நல்ல குடிமக்கள் கிடைப்பார்கள். சுயக் கட்டுப்பாட்டுடன் நான்காண்டுகள் நீங்கள் நன்கு படித்து வந்தால், இந்த கல்வி நிறுவனங்களில் நிறுவனர் தலைவர் போல நல்ல முன்னுதாரணமாக திகழலாம். முயற்சியும் பயிற்சியும் உங்களை மேம்படுத்தும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து விட்டு நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். தெரியாத பல தகவல்களை இந்த பொறியியல் பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தரும். அனைவரிடமும் சகோதர அன்புடன் நன்கு பேசிப் பழகி வளருங்கள். உங்களை நீங்களே நேர்மறையாக தயார்படுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் இந்த சமுதாயத்தில் நீங்கள் சிறப்புடன் வாழ முடியும்.
வாழ்க்கையில் போலிகளை நம்பாமல், நல்ல வழிகாட்டிஇடம் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல வழியில் நீங்கள் சென்றால் எதிர்காலம் நல்லபடியாக அமையும். நன்னடத்தை, நல்ல தோற்றம், குறிக்கோள் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு நல்ல முறையில் கல்வி கற்று முன்னேறி, இந்த நாட்டையும் முன்னேற்ற வேண்டும் என்றும் புலவர் M . ராமலிங்கம் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மஹேந்ரா கல்வி நிறுவனங்களின் கல்லூரி முதல்வர் சண்முகம், உழ முதல்வர் நிர்மலா,தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விசுவநாதன், வேலைவாய்ப்பு இயக்குனர் சரவணராஜ், சேர்க்கை அலுவலர் பிரசன்னா,துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகள் பெற்றோர்கள், உள்பட பலரும் கலந்துகொண்டனர்.