ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் மாணவர் தலைவர் மற்றும் அணித் தலைவர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவில் வெற்றி விகாஸ் கல்வி நிறுவனர் எஸ்.குணசேகரன் தலைமை வகித்தார்.வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியின் மேலாண்மை இயக்குனர் ஜி.வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார். ஆத்தூர் சுவாமி பப்ளிக் பள்ளியின் தலைவரும், சேலம் சுவாமி இன்டர்நேஷனல் பள்ளியின் செயலாளருமாகிய எஸ்.வெங்கடேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பள்ளிக் கொடியேற்றி வைத்துப் பேசினார்.

விழாவில் மாணவப் பிரதிநிதிகளாகப் பதவியேற்கும் மாணவர்கள் அவர்களின் கல்வி, விளையாட்டு மற்றும் பிற சாதனைகளுடன் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். பதவியேற்போர் சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதையை செய்து தங்களுக்கான கொடிகளையும் அடையாள சின்னங்களையும் பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக நடந்த மாணவர் தேர்தலில் மாணவர் தலைவராக பதினொன்றாம் வகுப்பு உயிரியல் பிரிவு மாணவர் இ.ஆர்.ஆனந்தராஜ், துணைத்தலைவராக ஒன்பதாம் வகுப்பு மாணவர் கே.கே.ரிஷிபாலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.அக்குவா அணியின் தலைவராக பதினொன்றாம் வகுப்பு “கணினி பிரிவு”

மாணவர் எஸ்.கிரிஷ், துணைத்தலைவராக 9-ஆம் வகுப்பு மாணவர் எம்.எஸ்.சூர்யா, ஆரா அணியின் தலைவராக பதினொன்றாம் வகுப்பு உயிரியல் மாணவி கே.டி.பிரணவிகா, துணைத்தலைவராக 9-ம் வகுப்பு மாணவர் என்.எம்.தயாள சபரிஷ், பிளம்மா அணியின் தலைவராக 11-ஆம் வகுப்பு “கணினி பிரிவு” மாணவர் எம்.சபரிஷ், துணைத்தலைவராக 9-ஆம் வகுப்பு மாணவி டி.வருசா, டெரா அணியின் தலைவராக 11-ம் வகுப்பு வணிகவியல் மாணவி கே.எம்.வெனிக்காஸ்ரீ, துணைத்தலைவராக 9-ம் வகுப்பு மாணவர் எஸ்.பேரரசு தேர்ந்தடுக்கப்பட்டிருந்தனர். விளையாட்டு அணி தலைவராக 11-ஆம் வகுப்பு “கணினி பிரிவு” மாணவர் எ.என்.மௌனிஷ், கலாச்சார தலைமைக்கு 11-ஆம் வகுப்பு வணிகவியல்” மாணவி டி.ஜி. அஸ்விதா ஆகியோர் தேர்ந்தடுக்கப்பட்டனர்.
விழாவில் பள்ளியின் முதல்வர் சுதா ரமேஷ் மாணவர் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மாணவர் தலைவர் மற்ற அணி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சிறப்பி விருந்தினர் எஸ்.வெங்கடேசன் விழாவில் பேசுகையில், தலைமை பண்பு என்பது ஒரு சமூகத்தை தொலைநோக்கு சிந்தனைகளுடன் துணிவுடன் வழி நடத்துவது. இன்றைய மாணவர்களாகிய நீங்கள்தான், நாளைய தலைவர்கள். எனவே தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள உங்கள் பள்ளி வழங்கியிருக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது பிற்காலத்தில் உதவும் என்றார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சுதா ரமேஷ் அவர்களின் தலமையில் ஒருங்கிணைப்பாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.