குமாரபாளையத்தில் காவல்துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியை சாரதா தலைமையில் நடந்தது. போதையால் அழிந்து வரும் சமுதாயத்தை காக்க விழிப்புணர்வு குறித்து இன்ஸ்பெகடர் தவமணி பேசினார். பத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்ஸ்பெக்டர் தவமணி பரிசுகள் வழங்கினர். போதைக்கு அடிமையாக மாட்டோம் என்று மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். இதில் சின்னப்ப நாயக்கன்பாளையம் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியை மலர்விழி, நாராயண நகர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பாரதி உள்பட பலர் பேசினர்.
குமாரபாளையத்தில் காவல்துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது.
RELATED ARTICLES