Sunday, April 20, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைபுதிய இந்திய எழுத்தறிவு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் இணை இயக்குனர் பொன்குமார் ஆய்வு

புதிய இந்திய எழுத்தறிவு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் இணை இயக்குனர் பொன்குமார் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் -ராசிபுரம் பகுதிகளில் புதிய இந்தியா எழுத்தறிவு திட்டத்தின் கீழ் நடைபெற்ற எழுத்தறிவித்தல் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறையின் திட்ட இணை இயக்குனர் பொன்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

புதிய இந்தியா எழுத்தறிவு திட்டத்தின் கீழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுத்தறிவினை கற்பித்து நாமக்கல் மாவட்டத்தில் எழுது படிக்க தெரியாத எவரும் இல்லை என்ற நிலையை அடைவதற்கான பயிற்சி பல்வேறு பள்ளிகளில் பெற்றோர்கள், முதி்யோர்கள் போன்றோருக்கு நடைபெற்று வருகிறது. புதுசத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் அதன் இணை இயக்குனர் பொன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய இந்தியா எழுத்தறிவு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பயிற்சிகள், தன்னார்வர்களுக்கான வழிகாட்டுதல் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக இந்த ஆய்வு முகாமில் பள்ளித் துணை ஆய்வாளர் கை.பெரியசாமி வரவேற்றுப் பேசினார். உதவி திட்ட அலுவலர் குமார் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் சுப்பிரமணியம், அருள் புனிதன் பள்ளித் துணை ஆய்வாளர் சு. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிந்துஜா, வட்டார வளம் மைய ஆசிரிய பெற்றோர்கள் மகேஷ்வரி, கலைச்செல்வி , தினேஷ் உள்ளிட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் ராசிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, வி.நகர் பள்ளியில் நூறு நாட்களில் வாசித்தல் மற்றும் கணித அடிப்படைத் திறனை சோதித்தறிதல் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வித்துறை திட்ட இணை இயக்குனர் பொன் குமார் நேரில் பார்வையிட்டு கற்பித்தல் நிகழ்வினை மதிப்பீடு செய்தார். ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரி அரசியல் அறிவியல்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஆர்.சிவகுமார் பங்கேற்று மதிப்பீட்டுப் பணியை பார்வையிட்டார். இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் ச.அருள்மணி, பள்ளிகளின் துணை ஆய்வாளர்கள் சு.கிருஷ்ணமூர்த்தி, கை. பெரியசாமி, பள்ளி தலைமை ஆசிரியை வே .லட்சுமி, ஆசிரியர் என் .ஓபுளிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!