ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 81 அணிகள் பங்கேற்றுள்ள கைப்பந்து போட்டியின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், சேலம் பொியார் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித் துறை இயக்குநர் கே.வெங்கடாசலம் ஆகியோர் பங்கேற்று கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.
முன்னதாக அனைத்து பல்கலைக்கழக அணி மாணவர்களின் அணிவகுப்பு மாியாதை நடைபெற்றது. அதன் பின்னர் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்து தொடக்கவுரையாற்றிப் பேசுகையில், 75-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களிலிருந்து இரண்டாயிரத்திற்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆறு நாட்கள் பங்குபெறும் போட்டியாக இதைப் பொியார் பல்கலைக்கழகம் நடத்துகிறது. கைப்பந்து போட்டி என்பது உடல் வலிமை, மன வலிமை, கைகளின் பலம், மனோ திடம் இவைகளின் அடிப்படையில் நடத்தப்படும் அருமையான விளையாட்டு ஆகும். ஆரோக்கியமான தேகத்தில் தான், ஆரோக்கியமான மனம் உள்ளது என்பது போல், நீங்கள் விளையாட்டில் ஈடுபடுவதால் உங்கள் உடல் உறுதி பெறுகிறது. அதனோடு மன வலிமையும் அதிகாிக்கிறது. மேலும் குழு மனப்பான்மை, நேர மேலாண்மை, விடாமுற்சி, சமயோசித சிந்தனை போன்ற பண்புகள் மெருகூட்டப்படுகிறது. ஆகவே மாணவர்களாகிய நீங்கள் தோல்வியை வீழ்ச்சியாகக் கருதாமல், தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அது உங்களை வெற்றியை நோக்கி வழிநடத்தும் என்று பேசினார்.
இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சோி போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து 81 பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன், உடற்கல்வி இயக்குநர் என்.சந்தானராஜா, கல்லூரி முதல்வர்கள், முதன்மையர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.