குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில் மகா குண்டம், தேர்த்திருவிழாவையொட்டி பிப். 18ல் பூச்சாட்டுதல் விழா நடந்தது. பிப். 25ல் மறு பூச்சாட்டு, பிப். 26ல் கொடியேற்றம், மார்ச் 4ல் தேர்கலசம் வைத்தல், அதே நாள் இரவு காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல், மார்ச் 5ல் மகா குண்டம், பூ மிதித்தல், மார்ச் 6ல் அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, மார்ச் 7ல் தேர் நிலை நிறுத்துதல், வாண வேடிக்கை, அம்மன் திருவீதி உலா, மார்ச் 8ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, மார்ச் 9ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா ஆகியன நடைபெறவுள்ளது. திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி மற்றும் குழுவினர் செய்து வருகிறார்கள். இதில் பூசாரிகள் சண்முகம், சதாசிவம், சண்முகசுந்தரம் உள்பட பலர் வழிபாடுகள் நடத்தினர்.
காளியம்மன் திருவிழா சிறப்பு அலங்கார வழிபாடு
RELATED ARTICLES