Saturday, January 17, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் பொங்கல் தின விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் தமிழர் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர். இப்பொங்கல் விழாவில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான உறி அடித்தல், கயிறு இழுத்தல், கோலப்போட்டி, லக்கி கார்னர் ஆகிய விளையாட்டுப் போட்டிகளும், தமிழ் இலக்கியப் போட்டிகளான கட்டுரை, ஓவியம், கவிதை ஆகிய போட்டிகளும் நடைபெற்றன.

இப்பொங்கல் விழாவில் பங்குபெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ராசிபுரம் முத்தாயம்மாள் எஜிகேசனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேசன் தாளாளர், ஆர். கந்தசாமி, டிரஸ்டி அம்மணி கந்தசாமி வாழ்த்து தெரிவித்தனர். இப்பொங்கல் விழா போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கல்லூரியின் இணைச்செயலாளர் என்ஜினியர் ஜி.ராகுல், நிர்வாகக்குழு உறுப்பினர் உமாராணி குணசேகரன், ஜி.காவ்யா ஆகியோர் பரிசுகள் வழங்கிப் பேசினர். முன்னதாக விழாவில் கல்லூரி முதல்வர்கள் எம்.மாதேஸ்வரன் பி.வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கல்லூரியின் டீன்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!