Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeதகவல்கள்குடும்ப ரேஷன் அட்டை தொடர்பான குறை தீர்க்கும் முகாம்கள்

குடும்ப ரேஷன் அட்டை தொடர்பான குறை தீர்க்கும் முகாம்கள்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன்படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் வரும் 09.11.2024-ஆம் தேதி (சனிக்கிழமை ) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 1)நாமக்கல், 2)இராசிபுரம், 3)மோகனூர், 4) சேந்தமங்கலம், 5)கொல்லிமலை, 6)திருச்செங்கோடு, 7)பரமத்தி வேலூர் மற்றும் 8)குமாரபாளையம், வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள்: தலைமையில் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் மேற்படி குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு இம்முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாமக்கல்,மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!