மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்,பும்ரா முதல் இன்னிங்சில் ஆறு விக்கெட் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட் என மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றினார்
இதன் மூலம் அஸ்வினை பின்னுக்குத் தள்ளி பும்ரா பந்துவீச்சாளர்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.இந்த நிலையில் ஐசிசி தரவரிசை வரலாற்றில் எந்தெந்த இந்திய வீரர்கள் எல்லாம் முதலிடத்தை பிடித்திருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கவாஸ்கர், வெங்சர்கார், கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ,அதிரடி வீரர் சேவாக், கம்பீர், முன்னாள் கேப்டன் கோலி ஆகியோரெல்லாம் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்திருக்கிறார்கள்.
இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை வெறும் நான்கு இந்திய வீரர்கள் தான் இதுவரை முதல் இடத்தில் இருந்திருக்கிறார்கள். சச்சின் டெண்டுல்கர் முன்னாள் கேப்டன் தோனி, விராட் கோலி மற்றும் கில் ஆகியோர் இந்த பெருமையை பெற்றிருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை இதுவரை மூன்று இந்திய வீரர்கள் தான் முதலிடத்தை பிடித்திருக்கிறார்கள்.
அதில் கம்பீர், விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் அடங்குவார்கள். பந்துவீச்சாளர்கள் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை நான்கு இந்திய வீரர்கள் முதலிடத்தில் இருந்திருக்கிறார்கள். அஸ்வின், ஜடேஜா, தற்போது பும்ரா என நான்கு வீரர்கள் இருந்திருக்கிறார்கள். ஒரு நாள் கிரிக்கெட்டில் பவுலர்களை பொறுத்தவரை கபில்தேவ், மனிந்தர், கும்ப்ளே, ஜடேஜா, பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் இருந்திருக்கிறார்கள்.
இதேபோன்று டி20 தரவரிசை பட்டியலில் பும்ரா, ரவி பிஸ்னாய் ஆகிய இரண்டு வீரர்கள் மட்டுமே இதுவரை முதல் இடத்தை பிடித்திருக்கிறார்கள். ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை மூன்று இந்திய வீரர்கள் முதல் இடத்தில் இருந்திருக்கிறார்கள். கபில்தேவ், அஸ்வின்,ஜடேஜா மூவரும் இருந்திருக்கிறார்கள். ஒரு நாள் கிரிக்கெட்டை பொருத்தவரை கபில்தேவ் மட்டும் தான் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். டி20 பொருத்தவரை இதுவரை எந்த ஆல் ரவுண்டரும் இந்தியாவில் இருந்து முதலிடத்தை பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.