Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஆன்மிகம்ராசிபுரம் ஸ்ரீஅத்தனூர் அம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா - திருவிளக்கு பூஜை

ராசிபுரம் ஸ்ரீஅத்தனூர் அம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா – திருவிளக்கு பூஜை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள அருள்மிகு ஸ்ரீ அத்தனூர் அம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவினை தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜை, வளையல் மாலை அணிவிப்பு, விசேஷ ஹோம பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடுகள் நடத்தினர்.

ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற அத்தனூர் அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் விஷேச நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். ஆடிப்பூரத் திருவிழா அண்மையில் நடைபெற்றதை தொடர்ந்து விழாவில் அத்தனூர் அம்மனுக்கு விசேஷ யாகங்கள் நடைபெற்று, சிறப்பு அபிஷேகம், கலசாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு வளையல் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திரளான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையானது கோவில் அறக்கட்டளைத் தலைவர் ஆடிட்டர் வி.நடராஜன் உட்பட, கோயில் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக விழாவில் ஸ்ரீ அத்தனூர் அம்மன் திருக்கோயில் நிர்வாக அலுவலர் சிவகாமி குத்துவிளக்கு ஏற்றினார்.

இதன் தொடர்ச்சியாக உற்சவர் அலங்காரம், மூலவர், உற்சவருக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அம்மன் திருத்தேரில் எழுந்தருளி திரு வீதிஉலா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் விழியன் குல அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், செயலாளர் ஏ.ஜி.எம். பெரியசாமி, பொருளாளர் வி.ஏ.ஓ. பெரியசாமி, முன்னாள் தலைவர் வெங்கடாஜலம், ஆத்தூர் முத்துலிங்கம், எஸ்.ஆர்.வி., ஏ.ராமசாமி, ஆத்தூர் சண்முகம், கள்ளக்குறிச்சி முத்துகுமார், வீரகனூர் ராஜா, அம்மன் மணி, கோடீஸ்வரன், முல்லைவாடி சேகர், தலைவாசல் ஆறுமுகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!