Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரமம் நூற்றாண்டு விழாவினை தொடர்ந்து ஜூலை.10-ல் கதர் பவன் திறப்பு

திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரமம் நூற்றாண்டு விழாவினை தொடர்ந்து ஜூலை.10-ல் கதர் பவன் திறப்பு

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நூற்றாண்டு விழாவை தொடர்ந்து புதிய கதர்பவன் திறப்பு விழா ஜூலை 10-ஆம் தேதி சித்தளந்தூரில் நடைபெறும் என ஆசிரமத்தின் தலைவர் க.சிதம்பரம் தெரிவித்துள்ளார். திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் ராஜாஜி அவர்களால் காந்திஜியின் நிர்மான திட்டங்களின் ஒரு பகுதியாக 06. 02.1925 -இல் துவங்கப்பட்டது.

இந்த ஆசிரமத்திற்கு காந்தியடிகள் 19.03.1925, 13.02.1934 ஆகிய காலங்களில் வருகை தந்துள்ளார். மேலும் பாபு ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் பட்டேல், விஞ்ஞானி பி.சி.ராய் ,ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர் ஆகிய தேசத் தலைவர்கள் காந்தி ஆசிரமத்திற்கு வருகை தந்துள்ளனர். புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள காந்தி ஆசிரமம், நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து காந்தி ஆசிரமத்தின் புதிய உதயமாக காந்தி ஆசிரம கதர் பவன் சித்தாளந்தூர் பஸ் நிலையம் எதிரே ஜூலை.10-ல் துவங்கப்பட உள்ளது.

தரமான முறையில் இங்கு தயாரிக்கப்படும் பொருட்களான கதர் மற்றும் பட்டு ரகங்கள், மெத்தை, தலையணை, பர்னிச்சர்கள், ஊதுபத்தி, வாசனை பொருட்கள், தேன், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ,விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், வேப்பம் புண்ணாக்கு, கை காகித பைகள், குல்கந்து, பார் சோப் ரகங்கள், குளியல் சோப், கற்றாழை, செம்பருத்தி, ஆவாரம்பூ, சாம்பு ரகங்கள், சீயக்காய், அரப்புத்தூள் உள்ளிட்டவற்றை வாங்கி ஆசீரமத்துக்கு துணை நிற்க வேண்டுமென ஆசிரமத்தின் தலைவர் க.சிதம்பரம், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!