கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து, பல பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் இரு சிறந்த கிராமப்புற பகுதியினை சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தலா ரூ.1 லட்சம் வீதம், ரூ.2லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே 2023-24ம் ஆண்டிற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை அறிவியல் நகரம் வரவேற்கிறது.
விண்ணப்பப்படிவம், விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல் குறிப்புகள் ஆகியவற்றினை அறிவியல் நகர இணையதளம் www.sciencecitychennai.in-ல் அறிவிப்புகள் காலத்தில் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும், மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக அறிவியல் நகரத்திற்கு 31.08.2024-க்கு முன்னர் வந்து சேருவதற்கு ஏதுவாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.