ராசிபுரம் “ஈஷா யோகா மையம் சார்பில், யோகா பயிற்சி முகாம் மே.8-ல் துவங்கி ஏழு நாட்களுக்கு ராசிபுரத்தில் நடைபெறுகிறது.
ராசிபுரம் பட்டணம் சாலை சரவண மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும் இம்முகாம் காலை 6 மணி முதல் 8.30 மணிவரையும், பின்னர் மாலை 6 மணி முதல் 8. 30 மணிவரையும் இரு பிரிவுகளாக இப்பயிற்சி முகாம் மே.14 வரை நடைபெறும். இதில் ஏதாவது ஒரு பிரிவில் 15 வயதிற்கு மேற்பட்டோர் ஏழு நாள் முகாமில் பங்கேற்கலாம்.
இப்பயிற்சி மேற்கொள்வதால் மனம் ஓருநிலைப்படுத்தப்படும், நினைவாற்றல் அதிகரிக்கும், படிப்பில் மனம் குவிப்பு, ஆஸ்துமா, ரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டுவலி, முதுகுவலி, இருதய நோய், உடற் பருமன் போன்றவற்றையும் தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மன அழுத்தமற்ற வாழ்வு, மேம்பட்ட ஆரோக்கியம், செயல்திறன் மேம்பாடு, சுயமுன்னேற்றம் ஏற்படும். மேலும் விபரங்களுக்கு 9443570950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ராசிபுரம் ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.