நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் டாக்டர் ஹானிமன் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது .இந்த கல்லூரி பல்வேறு வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் இருபாலாரும் பயிலும் வகையில் 24 ஆண்டாக செயல்பட்டு வருகிறது.
மேலும்,டாக்டர் சாமுவேல் ஹனிமன் அவர்களின் பிறந்த நாளை உலக ஹோமியோபதி தினமாக கொண்டப்பட்டு வரும் நிலையில் இன்று அவரது 269 பிறந்த தினம் ஆவது கல்லூரியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தியும், நடன நிகழ்ச்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இலவச மருத்துவம் அளிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஹோமியோபதி சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கினர்.