Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைஞானமணி கல்வி நிறுனங்களில் ஞான் பெஸ்ட் 2கே24 - ஆண்டு விழா நடைபெற்றது

ஞானமணி கல்வி நிறுனங்களில் ஞான் பெஸ்ட் 2கே24 – ஆண்டு விழா நடைபெற்றது

ஞானமணி கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா, ஆண்டு விழா ஞான் பெஸ்ட் 2கே24 என்ற தலைப்பில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் பி.பிரேம்குமார் வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் ப.மாலாலீனா விழாவினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தலைவர் தி.அரங்கண்ணல் தலைமை வகித்துப் பேசுகையில், சினிமா என்பது சக்தி மிகுந்த ஆயுதம். அது பல தலைவர்களை உருவாக்கியுள்ளது. ஆனால் உண்மையில் மாணவர்கள் தான் உண்மையான ஹூரோக்கள். நடிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்குவாய்ப்புகளை தருவதாக நடிகர் ஜீவா கூறியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா பங்கேற்றுப் பேசினார். அவர் பேசுகையில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எப்பொழுது எல்லாம் சதம் காண்கிறாரோ அப்பொழுதெல்லாம் இது உங்களது சிறந்த ஆட்டமா? என்று கேட்டால் அது இன்னும் வரவில்லை என்று கூறுவார். அது போல மாணவர்களும் தங்களின் முழு செயல் திறனையும் தங்களின் சிறந்த பதிப்பிற்காக வெளிபடுத்துமாறு கூறினார். கல்லூரி வாழ்க்கை என்பது திரும்ப வராது அதனால் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். எனக்கு நிறைய வழிகாட்டிகள் இருந்தார்கள் அதனால் தான் என் வாழ்க்கை வெற்றியடைந்ததாகவும் அது போல் மாணவர்கள் குருக்களிடம் அறிவுரைகளை பெற்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றார்.

தோல்வியே ஒருவனுக்கு கிடைக்கப்பெறும் வெற்றியின் முதல்படி என்று கூறினார். மாணவர்கள் தாங்கள் இருக்கக் கூடிய துறையில் வெற்றியையோ, தோல்வியையோ பற்றி கவலைப்படாமல் சிறந்த திறனை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தும் போதே வெற்றி கிடைக்கும் என்று கூறினார். இரவு நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டு உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மாணவர்களுடன் சேர்ந்து பாடல்கள் பாடியும் நடனங்கள் ஆடியும் மகிழ்வித்தார். இறுதியில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மாணவ மாணவிகளுக்கு சிறந்த செயல் திறனுக்காகவும், வகுப்பில் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், நூலகத்தினை சிறப்பாக பயன்படுத்தியதற்கும், 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களின் கல்வி சாதனைக்காகவும், விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. முன்னதாக ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் தி.கே.கண்ணன், கல்வியியல் கல்லூரியின் டீன் எஸ்.ஆரோக்கியசாமி ஆகியோர் ஆண்டறிகைகளை சமர்ப்பித்தனர். முடிவில் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியின் கல்வி இயக்குநர் பி.சஞ்செய் காந்தி நன்றி கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!