Sunday, April 5, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்ராசிபுரம் அருகே வீட்டில் இருந்த முதியவர்களை ஏமாற்றி ரூ.8.55 லட்சம் திருடிச்சென்ற செல்வாக்கு மிக்க சீரியல்...

ராசிபுரம் அருகே வீட்டில் இருந்த முதியவர்களை ஏமாற்றி ரூ.8.55 லட்சம் திருடிச்சென்ற செல்வாக்கு மிக்க சீரியல் கிரிமினல் பெண் கைது

ராசிபுரம் அருகே திருமணத்திற்காக வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரூபாயைத் திருடிய ஏமாற்றி கொள்ளையடிப்பதில் கைதேர்ந்த பெண் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ராசிபுரம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூமலை (90). இவர் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மருமகள் சங்கீதா அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் மிதுனாவிற்கு வரும் ஏப்ரல் மாதம், 28-ம் தேதி திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதற்காகத் திருமணச் செலவிற்காகச் தனது பீரோவில் ரூபாய், 6,45,000, பூமலை தனது பீரோவில் ரூபாய், 2,10,000 என மொத்தம் ரூபாய், 8,55,000 ரொக்கப் பணத்தை வைத்திருந்தனர்.

கடந்த மார்ச் மாதம், 16-ம் தேதி மதியம் பூமலை மற்றும் அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது சுமார், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி ஸ்கூட்டரில் வந்துள்ளார். அவர் வாசலில் மாமரத்தடியில் அமர்ந்திருந்த பூமலையின் மனைவியிடம் உறவினர் போலவே ஏமாற்றிப் பேச்சு கொடுத்துள்ளார். ‘என்னை அடையாளம் தெரியவில்லையா?’ எனக் கேட்டு நெடுநேரம் பேசிய அந்தப் பெண், பின்னர் தனக்குக் கருவேப்பிலை வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

அதனைப் பறிக்கத் தோட்டத்திற்குச் செல்வது போல நடித்த அந்தப் பெண், திடீரென காம்பவுண்டுச் சுவரைத் தாண்டி குதித்து வீட்டிற்குள் புகுந்துள்ளார். வீட்டிற்குள் இருந்த பூமலையிடம், ‘அம்மா வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்யச் சொன்னார்கள்’ எனப் பொய் கூறிவிட்டு பீரோவில் இருந்த ரூபாய், 8,55,000 பணத்தைத் திருடிக்கொண்டு தனது ஸ்கூட்டரில் தப்பிச் சென்றார்.

புகார் ஏற்க காவல்துறை தாமதம்:

இது குறித்து பணம் திருடிச்சென்றதை அறிந்த பூமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், உடனடியாக புகாரை ஏற்காததால், பூமலை குடும்பத்தினர் டிஐஜி.,ஐஜி வரை புகார் செய்து, அதன் பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் புலனாய்வு அடிப்படையில் இந்தத் திருட்டில் ஈடுபட்டது குறித்து விசாரணை செய்தனர். திருட்டில் ஈடுபட்டது சேலம் கன்னங்குறிச்சி கன்னியா தெருவை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி மைதிலி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து மைதிலியைப் போலீஸார் கைது செய்து, அவர் பயன்படுத்தி ஸ்கூட்டரை பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் இருந்து ரூ.5.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே 60-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கு உள்ளது என்பதும், பல முறை சிறைக்கு சென்று திரும்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜாமீனில் விடுவிப்பு:

போலீஸாரால் கைது செய்யப்பட்ட இவர், சிறைக்கு அனுப்பி வைப்பதற்கு ஏற்ற உடல் நிலையில் இல்லை,இருதய நோயாளி என காரணம் காட்டி, போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அந்த அளவிற்கு போலீஸ் துறையில் இவர் செல்வாக்கு மிக்கவராக உள்ளார் என்பது பார்க்க வேண்டிய ஒன்று.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!