Saturday, March 21, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்ரம்ஜான் தொழுகை முடித்த இஸ்லாமியருக்கு நீர் மோர், தர்பூசணி வழங்கல்

ரம்ஜான் தொழுகை முடித்த இஸ்லாமியருக்கு நீர் மோர், தர்பூசணி வழங்கல்

ராசிபுரம் பகுதியில் ரம்ஜான் பண்டிகை தொடர்ந்து இஸ்லாமியர்கள் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை தொழுகை நடத்தினர். இதனை தொடர்ந்து சேலம் சாலையில் உள்ள மஸ்ஜித்தில் இருந்து ஊர்வமாக ஈத்கா மைதானம் அங்கு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து தொழுகை முடித்து திரும்பிய இஸ்லாமியர்களுக்கு ராசிபுரம் மக்கள் நலக்குழு சார்பில் நீர்மோர், தர்பூசணி, வெள்ளரி போன்றறவை வழங்கப்பட்டன. இதில் மக்கள் நலக்குழுத் தலைவர் வி.பாலு, கெளரவித் தலைவர் ஜெ.ஜெயபிரகாஷ், செயலாளர் நல்வினை செல்வன், பொருளாளர் க.முருகன், நிர்வாகிகள் ராஜேஸ், முருகேசன், ஆனந்த், ஜாபர், அல்தாப், பி.மோகன்ராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்று இஸ்லாமியர்களுக்கு நீர்மோர், பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!