Wednesday, March 11, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்காளியம்மன் கோவிலில்மகா குண்டம், விழா

காளியம்மன் கோவிலில்மகா குண்டம், விழா

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் மகா குண்டம் விழா நடந்தது..
குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் மகா குண்டம் மற்றும் தேர்த்திருவிழா பிப்.24 பூச்சாட்டுதல் விழாவுடன் துவங்கியது. . மார்ச். 3ல் மறு பூச்சாட்டுதல், மார்ச். 4ல் கொடியேற்றம், மார்ச். 10ல் அம்மனுக்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றுதல், தேர்க்கலசம் வைத்தல், காவிரி ஆற்றில் சக்தி அழைத்து வருதல் நடந்தது.

smart

மகா குண்டம் பூ மிதித்தல், பொங்கல் ஆராதனை, விழா நடந்தது. குண்டம் விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்ற, மகா குண்டம் இறங்கினர். ஆண்கள்.பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர். நேற்று மாலை பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். பல பகுதியிலிருந்து பக்தர்கள் அலகு குத்தியவாறு ஊர்வலமாக வந்தனர். பலர் விமான அலகில் தொங்கியபடி வந்தனர். மார்ச். 12ல் அம்மன் திருக்கல்யாணம், மகா தேர்த்திருவிழா புறப்பாடு, வண்டி வேடிக்கை மார்ச். 13ல், தேர் நிலை சேர்த்தல், வாண வேடிக்கை, நாதஸ்வர இசையுடன், அம்மன் அலங்கார திருவீதி உலா, மார்ச். 14ல் மஞ்சள் நீராட்டு மெரவணை, மார்ச். 15ல் காளியம்மனுக்கு ஊஞ்சல் விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!