ராசிபுரம் தபால் நிலைய அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் கடவுசீட்டு அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.

கோவை கடவுசீட்டு மண்டல அலுவலகத்துக்கு அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் தகவல் வந்தது. இதனையடுத்து கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து கடவுச்சீட்டு அலுவலகங்களிலும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராசிபுரம் தபால் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் கடவுச்சீட்டு அலுவலகம், தபால் நிலைய அலுவலகம் போன்ற இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும் மோப்பாநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. இந்த சோதனையில் கடவுச்சீட்டு, அஞ்சலக பணிகள் பாதிப்பு ஏதும் இல்லை. வழக்கம் போல் அலுவலகம் செயல்பட்டது.





