குமாரபாளையம் மகளிர் சுய உதவி குழுவினரின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.குமாரபாளையம் நகராட்சி, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் செயல்படும் சிங்கப் பெண்கள் பகுதி அளவிலான கூட்டமைப்பில் உள்ள மகளிர் சுய உதவி குழு பெண்கள் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. சமுதாய வள பயிற்றுனர் மகாலட்சுமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சிரிப்பு யோகா பயிற்சியாளர் கோபால் பங்கேற்று, மகளிருக்கு சிரிப்பு யோகா பயிற்சியளித்தார். மகளிர் குழுவின் அவசியம், தமிழக அரசின் சார்பில் மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து மகாலட்சுமி பேசினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமுதாய வள பயிற்றுனர் நாராயணி செய்திருந்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
மகளிர் சுய உதவி குழுவினரின்மகளிர் தின விழா
RELATED ARTICLES





