ராசிபுரம் இன்னர்வீல் கிளப், ஸ்ரீஹரி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அன்ட் பேக்கரி ஆகியவற்றின் சார்பில் மகளிர் தினவிழாவினை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்கான விழாவில் இன்னர் வீல் கிளப் தலைவர் வழக்குரைஞர் என்.சிவலீலா ஜோதி தலைமை வகித்தார். ஸ்ரீஹரி கிருஷ்ணா நிறுவன இயக்குனர் எஸ்.குணசேகரன் வரவேற்றார்.

விழாவில் சமுதாய தொண்டாற்றும் பெண்கள் கெளரவிக்கப்பட்டனர். பின்னர் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு, பொதுமக்களுக்கும் கேக் வழங்கப்பட்டது. விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், ஏ.மஸ்தான், நடராஜன், வெங்கடாஜலபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இதே போல் ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியை திவ்யபாரதி மகளிர் தினவிழாவை தொடர்ந்து வீடுகள் தோறும் சென்று பெண்களை கெளரவிக்கும் வகையில் கையில் அனைவருக்கும் மெகந்தி இட்டு வாழ்த்துக்கூறினார்.





