சேலம் மனம் மன்றம் கலை இலக்கிய ஆன்மிக பேரவை நகைச்சுவை மன்றம் ஆகியவற்றின் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மனம் மன்றத்தின் 51 ஆம் ஆண்டு விழாவும், நகைச்சுவை மன்றத்தின் 18-ம் ஆண்டு விழாவும் நடைபெற்றது. சேலம் முள்ளுவாடி கேட் ரிஷி மகாலில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக பேரரசு மனவளக் கலை பேராசிரியர் CTN.சுதாகரன் ஸ்ரீ ராம நாம மகிமை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி பேசினார்.

இந்த விழாவில் ஆத்தூர் பிளஸ் மேக்ஸ் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் பி. தனபால் பங்கேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை துணுக்குகளும், திருக்குறள் மற்றும் விளக்க நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.





