Monday, December 29, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகிகள் நியமனம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகிகள் நியமனம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் தேனியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்
பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் பரிந்துரையின் பேரில் நாமக்கல்லை சேர்ந்த ஶ்ரீ தேவி டிம்பர்ஸ் உரிமையாளர் உதயகுமார் மற்றும் ராமு மெடிக்கல்ஸ் உரிமையாளர் அன்பழகன் ஆகியோரை பேரமைப்பின் மாநில இணை செயலாளர்களாக நியமித்து, அதற்கான அறிவிப்பை மாநில தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டார்.

சிறப்பான செயல்பாட்டிற்காக நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் வட்டார அனைத்து வணிகர் சங்கத்திற்கு பாராட்டு கேடயம் கூட்டத்தில் வழங்கப்பட்டது. இதனை நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், வெண்ணந்தூர் வட்டார அனைத்து வணிகர் சங்க தலைவர் சுப்பிரமணியம்,செயலாளர் ரமேஷ், பொருளாளர் துரைசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!