தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தமிழ்க் கழகம் நடத்தும் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு 18 வாரமாக நடைபெற்றது.

பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு ராசிபுரம் பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கு.பாரதி தலைமை வகித்தார். பள்ளித் துணை ஆய்வாளர் கை .பெரியசாமி முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், குழந்தை பருவத்திலேயே திருக்குறள் சார்ந்து ஆய்வு மனப்பான்மையை ஊக்குவிக்கும் பொருட்டு திருக்குறளில் பயன்படுத்தப்படுகிற சொற்கள், திருக்குறளில் பயன்படுத்தப்படும் மரங்கள், திருக்குறள் வகைப்படுத்தப்பட்டுள்ள மலர்கள், திருக்குறள் பயின்று வந்துள்ள எண்கள், திருக்குறளுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் பதிப்பு முறைகள் ஒப்புரை சார்ந்து ஆய்வு மனப்பான்மை போன்றவற்றை ஊக்குவித்து பேசினார்.
முன்னதாக ராசிபுரம் தமிழ்க் கழகத்தின் பொருளாளர் வீ.ரீகன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக ராசிபுரம் நகர்மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். 18 ஆவது வாரம் அதிகாரமான 55 செங்கோன்மை, 57.வெரு வந்தசெய்யாமை, ஆகிய இரண்டு அதிகாரங்களையும் சீர்பிரித்து படித்து இசையோடு பாடியும் , எண்வகை மெய்ப்பாடுகளை வெளிப்படுத்தி கற்பித்தனர். முதன்மைக் கருத்தாளர்களான பி.தட்சிணாமூர்த்தி, மனோஜ்குமார் பங்கேற்று வகுப்பு ஆடல் பாடலுடன் தமிழ் இசைத் தமிழுடன் கற்பிக்கப்பட்டது. திருக்குறள் மனனம் செய்து ஒப்புவித்த மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது. நிறைவாக சீரை பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.





