Wednesday, November 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்நாமக்கல் மோட்டார் ஸ்பேர் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேசனின் பொதுக்குழு கூட்டம் மற்றும் பதவியேற்பு விழா

நாமக்கல் மோட்டார் ஸ்பேர் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேசனின் பொதுக்குழு கூட்டம் மற்றும் பதவியேற்பு விழா

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இணைப்பு சங்கமான நாமக்கல் மோட்டார் ஸ்பேர் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேசனின் 15-வது பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாமக்கல் நளா ஹோட்டலில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு TLS காளியப்பன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் செயலாளர் ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார். பொருளாளர் சந்திரமோகன் ஆண்டறிக்கை வாசித்தார்.

தொடர்ந்து புதிய தலைவராக சுரேஷ்குமார், செயலாளராக ஸ்டாலின், பொருளாளராக சந்திரமோகன், துணை தலைவராக செல்வராஜ், இணை தலைவராக கணேசன், துணை செயலாளராக ரமேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு அழகு ஆட்டோமொபைல்ஸ் வள்ளியப்பன் பதிவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பேரமைப்பிற்கு தொடர்ந்து ஆதரவும் ஒத்துழைப்பும் அளித்துவரும் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், அனைத்து வணிகர்களும் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இணைந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, முன்னாள் தலைவர் கார்த்திகேயன், ஆண்டவர் & கோ கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், துணை தலைவர் தேவி உதயகுமார், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் எவரெஸ்ட் ராஜா, மாநகர துணை அமைப்பாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழா நிறைவில் செயலாளர் ஸ்டாலின் நன்றி கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!