தேச ஒற்றுமை வலியுறுத்தியும், சமுதாய சேவையின் அவசியம், முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் வாசவி கிளப்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் சேலம் வைஷ்யா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், வாசவி கிளப் இன்டர்நேஷனல் (மாவட்டம் V501A) ஆளுனர் Vn.விஜயசங்கல்ப், KCGF A. வெங்கடேஸ்வர குப்தா ஆகியோர் தலைமையில் திட்டத் தலைவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு, தேசியக் கொடியை உயர்த்தி பேரணி நடத்தி நாட்டுபற்று விழிப்புணர்வை வெளிப்படுத்தினர்.

3600 அடி நீளமுள்ள தேசியக் கொடி, மாணவர்கள், மற்றும் மாவட்டத்தில் உள்ள அணைத்து கிளப் தலைவர்கள், செயலாளர்கள் , பொருளாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முக்கிய விருந்தினர்களாக Vn. டைமண்ட்KCGF Erukulla Ramakrishna – சர்வதேச தலைவர், – Vn. கோல்டன்KCGF சௌபாக்யா V. அதிகேசவன் – திட்ட ஆலோசகர், முன்னாள் சர்வதேச தலைவர், Vn. டைமண்ட்*KCGF R. ரவிச்சந்திரன் – முன்னாள் சர்வதேச தலைவர் , V501A மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் உள்ளிட்டோர் இதில் பக்கேற்றனர்.