ராசிபுரம் அருகேயுள்ள தொ. ஜேடர்பாளையம் அரசு பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து பவள விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், முன்னால் மாணவருமான டாக்டர் கே.பி.ராமலிங்கம், முன்னாள் மாணவர் ஜெயசீலன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வரவேற்றுப் பேசினார். ராசிபுரம் மனவளக்கலை மன்றத் தலைவர் கை.கந்தசாமி ஏற்பாட்டில் பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டிருந்தது. இச்சிலையை 1330 திருக்குறளை ஒப்புவித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் குறளரசி பட்டம் பெற்ற தியாகச்சுடர் என்ற 9-ம் வகுப்பு மாணவி திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பள்ளியில் பயின்று உயர் பொறுப்புகளில் இருந்து முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப் பரிசளிக்கப்பட்டது. பின்னர் பள்ளியில் பவள விழாவினையொட்டி பர்வின் சுல்தானா பங்கேற்று சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர், பவள விழா குழு நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர்.
தொ .ஜேடர்பாளையம் அரசு பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு
RELATED ARTICLES